கோழி உப்பு கறி
இந்த ரெசிபிய கண்டிப்பா try பண்ணுங்க அப்றம் பாருங்க உங்கள எல்லாரும் பாராட்டுவாங்க😍
Ingredients👩🍳
- கோழி 500 g chicken🍗
- காந்த மிளகாய் 15 துண்டுகள்
- வெங்காயம் 1 & 1/2 காய் 🌰
- அரைத்த வெள்ளை பூண்டு & இஞ்சி 🧄🫚
- தேவைபட்டால் பச்சை மிளகாய் 🌶
- கருவேப்பிலை
- தக்காளி ஒரு காய்🍅
- வெந்தயம் , சீரகம்
- வருத்த கறி பவுடர் ( Rosted curry powder )
- சிவப்பு மிளகாய் தூள் ( Red Chilli Powder)
- மிளகாய் தூள் ( Pepper Powder)
- மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு 🧂
Instructions 👩🍳
கண்டிப்பாக காய்ந்த மிளகாய் தேவை .
இஞ்சி பூண்டு பேஸ்ட் தான் இந்த ரெசிபிக்கு
சுவை சேர்க்கும் அதனால் அதை அரைத்து குழம்பிற்கு சேர்த்துக்க சுவை அதிகமாக இருக்கும்
Let's cook Now 👩🍳
முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் இட்டு சூடாக்கவும் பின் அதில் சீரகம் வெந்தயம் இட்டு பொன் நிறம் வரும வரை பிரட்டவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து இரண்டும் பொன் நிறம் வரும் வரை வறுத்த பின் காய்ந்த மிளகாய் துண்டுகளாக நறுக்கி வதக்கவும்
NOTE : காய்ந்த மிளகாய் சேர்க்க முன் அடுப்பில் நெருப்பு அளவை நன்கு குறைக்கவும் இல்லன வீட்டில அனைவருக்கும் இருமல் வர நீங்க காரணம் ஆவிருவீங்க.... 😜
வருத்த பின் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தக்காளி சேர்த்துவிட்டு நன்கு பிரட்டவும் சற்று நேரம் பிறகு அனைத்து ஐட்டம்கலும் நல்ல பொன் நிறமாக வந்த பின்
வருத்த கறி பவுடர் ( Rosted curry powder) சிவப்பு மிளகாய் தூள் ( Red Chilli Powder) மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்
பின் சுத்தம் செய்த கோழியை சேர்க்கவும் பின்பு கோழிகான உப்பு, மிளகாய் தூள் ( Pepper Powder) சேர்த்துவிட்டு 15 நிமிடம் இருந்து 20 நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்கும் போது கோழியின் நீரினால் குழம்பு நல்ல திக்கான பதத்தில் காணலாம்...
குழம்பு அதிகம் தேவைப்படும் என்று நினைத்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்....
🤤 சுவையான கோழி உப்பு கறி ரெடி.🤤
" உணவே மருந்து "
Click here to follow me on 👉Instagram



Comments
Post a Comment