வணக்கம் பிரண்ட்ஸ் இன்று நாம் பார்க்க இருக்கும் டாபிக் நோயில்லாத வாழ்கைக்கு முட்டையின் இரகசியம் . அன்றாடம் நாம் உணவுடன் சேர்க்கும் முட்டையில் என்ன பயன் இருக்கும்னு தெரிந்து சாப்பிடும் போது நமக்கு கொஞ்சம் மன நிறைவாக இருக்கும் .
முட்டைனு சொன்னால் வெறும் சாப்பாடு மட்டுமில்லாமல் நம்ம உடலுக்கு தேவையான எல்லா சத்தும் நிறைந்த ஒரு பொக்கிஷம்னு தாங்க சொல்லனும் . குறிப்பா சொல்லனும்னா மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் முட்டை தான் டாப் முதல்ல இருக்குங்க. அவ்வளவு பயன் நிறைந்தது உணவு இந்த முட்டை . அதில் சில முக்கியமான விட்டமின் பற்றி தான் நான் இன்னைக்கு உங்கள் கூட ஷேர் பண்ணிக்க போறன்
1. விட்டமின் - A
முட்டை சாப்பிடுவதால் நமக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் தீர்வு தரக்கூடியதாக முட்டையில் விட்டமின்- A அதிகமாக இருக்கின்றது.
விட்டமின் - A ரெட்டினால் என்றும் அழைப்பார்களாம் காரணம் இது கண்களில் விழித்திரை உருவாவதற்கான முக்கிய பங்கும் வகிக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால் அவை கருவிழியை பாதுகாக்கின்றது .
விட்டமின் A குறைபாட்டினால் தான் பார்வை இன்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும் என்பது உங்களுக்கு தெரியுமா நண்பர்களே?
2. விட்டமின் - D
முட்டையில் விட்டமின் - D அதிகமா காணப்படுகிறது. விட்டமின் - D புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க , தொற்று நோய்களை தடுக்க , முகப்பருக்கள் பிரச்சனை தீர , எலும்புகள் உறுதி பெறனு நிறைய பயன்களை நமக்கு தருகின்றது .
விட்டமின் - D குறைந்தபாடினால் தான் தோல் சம்மந்தமான நோய் கூட ஏற்படுகின்றது நண்பர்களே .
3. விட்டமின் - E
வைட்டமின் ஈ சத்து முட்டையில் அதிகம் நிறைந்திருக்கின்றன.
விட்டமின் - E நம் உடலில் பல வகையான நன்மைகளை தருகிறது.
இதன் பயன்களாக பித்த நீர் சுரக்க , தசைகள் வலிமை பெற , நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற , இதயம் வலிமை பெற மட்டுமின்றி தலை முடி நீளமான வளர்ச்சிக்கு கூட இந்த விட்டமின் - E உதவியாக அமைகிறது நண்பர்களே .
4.கோலைன்
முட்டையை தவிர எந்த உணவிலும் கிடைக்காத ஒரு சத்து தான் இந்த கோலைன் நண்பர்களே. இதன் பயன்படாக நம் மூளையின் இயக்கத்தில் முக்கிய பங்கு இருக்குங்க . மூளை சுறு சுறுப்பாக இயங்க இந்த சத்து உதவுகிறது.
இந்த கோலைனானது முட்டையில் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது .
5. ஒமேகா-3
இந்த ஒமேகா 3 உடைய நன்மைகள் நிறைய இருக்கு நண்பர்களே. அதிலும் முட்டையில் இந்த சத்து நிறையவே இருக்கு. இதன் பயன்களாக உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது .
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குறைவாக இருக்கும் போது சருமத்தில் வறட்சியை உண்டாக்குகிறது .
முட்டையில் ஒமேகா 3 அடங்கியுள்ளன என்பதால் முட்டையை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்றவாறு உணவில் சேர்த்தால் நமக்கு மிகவும் நன்மைகள் கிடைக்கும் .
முட்டையை அவியல் மூலம் உணவுக்கு சேர்ப்பதனால் சத்துக்களை முழுமையாக நமக்கு பெற்றுக்கொள்ள முடியும் நண்பர்களே.
அது மட்டுமல்ல முட்டையில் சால்மோனல்லா
பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. முட்டையை அவிக்கும்போது அவை இறந்துவிடுமாம் நண்பர்களே.
இனி சாப்பிடும் போது முட்டையை மிஸ் பண்ணிடாதீங்க நண்பர்களே 🥚👩🍳
🔥🔥🔥🔥💙
ReplyDeleteSuper plese do share more useful informations in future all the best😊
ReplyDeleteMost useful post
ReplyDeleteThank you
ReplyDelete